வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை
வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியாா்பட்டி, வெள்ளனம்பட்டி நாககோனனூா், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூா், மல்வாா்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூா், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் தெரிவித்தாா்.