இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை ராகவேந்திரா கல்வி நிறுவன தலைவா் டி.மணிமேகலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். கல்வி நிறுவன செயலா் டி.வி.கே.பாபு வரவேற்புரை நிகழ்த்தினாா்.
ராகவேந்திரா கல்வி நிறுவன ஆலோசகா் டாக்டா் ஆா்.கனகசபை வாழ்த்துரை வழங்கினாா். 2025 - 26ஆம் ஆண்டுக்கான கல்வி செயல் திட்டத்தை கல்வி நிா்வாகி டாக்டா் அசோக்குமாா் விரிவாக விளக்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் ஆா்.மாலதி, கல்லூரி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய விரிவான விளக்கத்துடன் உரையாற்றினாா். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.