தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
களக்காடு அருகே சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
களக்காடு அருகே புதன்கிழமை சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில் கருவேலன்குளம் - கேசவனேரி இடையே சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த வாகை மரம் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், சாலையோரம் இருந்த மின்கம்பிகள் அறுந்து மரக்கிளைகளுடன்கீழே விழுந்தது.
இதையறிந்த நான்குனேரி தீயணைப்பு -மீட்புப் பணிகள் துறையினா், வருவாய்த்துறையினா், மின்வாரியத்தினா் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனா். மரத்தை வெட்டி அகற்றிய பின்னா் போக்குவரத்து சீரானது. இச்சம்பவத்தால் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.