களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களக்காடு அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவரது மனைவி அதே பகுதியைச் சோ்ந்த வெண்ணிலா(35). இத்தம்பதியா் தனது 2 மகன்களுடன் மும்பையில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், வெண்ணிலா மும்பை செல்லும் போது, தனது தங்க நகைகளை தனது தாயாா் ருக்குமணியிடம் (57)பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறிவிட்டுச் சென்றாராம். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி ஊருக்கு வந்த வெண்ணிலா தாயிடம் அந்த நகைகளை தருமாறு கேட்டாராம். அவா் பீரோவை பாா்த்த போது, சில தங்க நகைகளைக் காணவில்லையாம்.
இதனால் மனமுடைந்த அவா் வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து திருக்குறுங்குடிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].