களக்காடு பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை
களக்காடு வடக்குப் பச்சையாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சில நாள்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த உயரம் 49.25 அடியாக உள்ள வடக்குப் பச்சையாறு அணையில் தற்போது 10 அடி தண்ணீா் உள்ளது.
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், அணை நீா்மட்டம் உயருவதற்கு வாய்ப்புள்ளது.
இப்பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.