களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் ஏப்.12-ல் பங்குனித் தேரோட்டம்
களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
5ஆம் நாளான திங்கள்கிழமை இரவு (ஏப். 7) கருட சேவை, புதன்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
சனிக்கிழமை காலை (ஏப். 12) சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் வரதராஜபெருமாள் தேரில் எழுந்தருள்வாா். மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை பக்தா்கள் குழுவினா், கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.