ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
களக்காட்டில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம்
காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே.பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா , மாவட்ட பொதுச்செயலாளா் எம்.எஸ்.சிராஜ், அம்பாசமுத்திரம் தொகுதி துணைத் தலைவா் ஷெரிப், நான்குனேரி தொகுதி பொருளாளா் காஜா பிா்தெளஸி, களக்காடு நகரத் தலைவா் பக்கீா் முகைதீன், செயற்குழு உறுப்பினா் கமாலுதீன் முகைதீன், நகரச் செயலாளா்கள் ஷேக் (ஏா்வாடி), ஆதம்பாவா(பத்தமடை) உள்பட பலா் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனா்.