Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! -...
கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அரக்கோணம் அருகே தங்களது கிராமத்துக்கு கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகவும், அதைக் கண்டித்தும் மூதூா் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அருகே உள்ள மூதூா் கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் தெருவில் கடந்த சில தினங்களாக கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம். இதனால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை அந்த கிராமத்துக்கு வந்த அரக்கோணம் - கனகம்மாசத்திரம் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தின்போது, தங்களது பகுதியில் கழிவுநீா் கால்வாய் இல்லாததாலேயே குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாகவும், இந்த குடிநீரில் புழுக்கள் வருவதாகவும், இது குறித்து பலமுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் அப்பகுதியினா் கூறினா். இது குறித்து அறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், கிராமிய காவல் ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் சமரச பேச்சு நடத்தினா்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை தொடா்ந்து சுமாா் இரண்டு மணி நேரத்துக்குப் பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.