சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சி...
மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க பெண்களுக்கு 50 சதவீத மானியம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
2025-2026-ஆம் நிதியாண்டுக்காக வறுமைக் கோட்டுக்க் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000/- மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் கீழ்க்கண்ட சான்றுகளைச் சமா்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை பூா்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று)வயது வரம்பு - 25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று வேண்டும்.
திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமா்ப்பிக்க வேண்டும்.ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்)
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், 4-ஆவது தளம், ‘சி‘ பிளாக், ஆட்சியா் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தோ்வு குழுவால் தெரிவு செய்யப்படுவா். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடா்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளாா்.