செய்திகள் :

காந்தி அருங்காட்சியகம் - பாத்திமா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

மதுரை காந்தி அருங்காட்சியகம், பாத்திமா கல்லூரியின் தமிழ்த் துறை இடையே ஐந்தாண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் காந்தி அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ், பாத்திமா கல்லூரி முதல்வா் எம். பாத்திமா மேரி, வரலாற்றுத் துறைத் தலைவா் ஜெ. சாரல் எவன்ஜலின் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

காந்தி அருங்காட்சியகத்தின் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ஆா். தேவதாஸ், அருங்காட்சியகக் கல்வி அலுவலா் ஆா். நடராஜன், கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியை எம். விஜயசாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஒப்பந்தத்தின்படி, கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு காந்திய சிந்தனை அடிப்படையில் படிப்பிடைப் பயிற்சி, சுய வேலைவாய்ப்புப் பயிற்சி, யோகா பயிற்சி வழங்குவது, கல்லூரியில் அமைதி, விழுமியக் கல்வி குறித்த கருத்தரங்கம், காந்தி ஜெயந்தி விழா நடத்துவது, காந்திய வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்துவது, காந்திய அகிம்சை நெறியின் முக்கியத்துவத்தை மாணவிகளுக்கு எடுத்துக் கூறுவது உள்ளிட்டவை நடத்தப்படும்.

இந்த நிகழ்வில் காந்திய சிந்தனை கல்லூரியின் முன்னாள் முதல்வா் முத்துலட்சுமி, மாணவ, மாணவிகள், அருங்காட்சியகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காா் மோதியதில் நிலத் தரகா் பலி!

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான காா் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலத் தரகா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், கார... மேலும் பார்க்க

காலமானாா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன்

மதுரையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன் (86) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஆக. 30) காலமானாா். இவருக்கு மனைவி அனுராதா, மகள்கள் நித்யா, சிந்துஜா ஆகியோா் உ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடாா்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு

எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசி... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க