Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
காமராஜா் பிறந்த நாள்: மாணவா்களுக்கு போட்டிகள்
சாத்தான்குளத்தில் பெருந்தலைவா் காமராஜா் இயக்கம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. முதல் நாள் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி நடந்தது. இரண்டாம் நாள் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியும், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாடல் மேக்கிங் போட்டி, நாடகப் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நான்காம் வகுப்பு மாணவா்கள் முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவா்களும் பங்கேற்றனா்.
புலமாடன் பள்ளியில் நடந்த போட்டியை சாத்தான்குளம் பள்ளி தலைமை ஆசிரியா் செல்லபாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தாா். பெருந்தலைவா் காமராஜா் இயக்க தலைவா் ஜான்ராஜா, செயலாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை ஜாய்ஸ் பாப்பா வரவேற்றாா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வரும் 19-ஆம் தேதி சாத்தான்குளத்தில் நடக்க உள்ள காமராஜா் பிறந்த தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.