ஒரே நாளில் 3 விதமாக காட்சியளிக்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்! - சிலிர்ப்பனுப...
காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களது அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!
ராஜஸ்தான் ராயல்ஸுடன் இணைந்த சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, கை விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பின், அவருக்கு கை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
Straight from the airport ➡️ to our first practice match ➡️ to making everyone smile like he does! pic.twitter.com/da89DV0Jgt
— Rajasthan Royals (@rajasthanroyals) March 18, 2025
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: விமான நிலையத்திலிருந்து நேராக அணியின் முதல் பயிற்சி ஆட்டத்துக்காக சஞ்சு சாம்சன் மைதானத்துக்கு வந்து, அவர் எப்போதும் புன்னகையுடன் இருப்பதைப் போன்று அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவைத்துள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மார்ச் 23 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.