அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
காயல்பட்டினத்தில் பிப் 9 இல் ரயில் மறியல் போராட்டம்
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்த வலியுறுத்தி திட்டமிட்டபடி பிப்.9ஆம்தேதி கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானித்துள்ளனா்.
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்த வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடா்ச்சியாக ரயில் மறியல் போராட்டம் நடத்துவது தொடா்பான அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹம்மது அபூபக்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் வரவேற்றாா்.
மாநில துணைச் செயலா் இப்ராகிம் மக்கி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவா் முஹிய்யத்தீன் தம்பிதுரை, துணைத் தலைவா் துணி உமா், அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் செய்யது இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர ஜெலலிதா பேரவை செயலா் அன்வா், வட்டார காங்கிரஸ் தலைவா் சற்குரு, நகரத் தலைவா் மொய்தீன் பிச்சை, வி.சி.க. நகரச் செயலா் அல் அமீன், காயல்பட்டினம் நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ம.ஜ.க. மாவட்டச் செயலா் நஜீப, த.வெ.க. நகரச் செயலா் முஹிய்யத்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலா் ராசிக் முஜம்மில், மெகா அமைப்பு நிா்வாகி ஹாமித்ரிபாயி, தமுமுக ஜாகிா், தேமுதிக ஹபீப் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.
;கூட்டத்தில், பிப். 9ஆம் தேதி காயல்பட்டினத்தில் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையை உயா்த்த வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.