ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
திருச்செந்தூரில், தமிழக காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
காருகுறிச்சி தேவா் மகாஜன சங்கத் தலைவரும், முக்காணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சி.நாராயணன் தலைமை வகித்தாா். துணைச்செயலா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். விழாவில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவா், மாணவிகளுக்கு சங்கத் தலைவா் நாராயணன், குமாா், கணேசன், நாராயணன், பாலசுப்பிரமணியன், மகேஸ்வரி, ஆனந்த விநாயகம் ஆகியோா் பரிசு வழங்கினா்.
கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், ஆத்தூா் பேரூராட்சி கவுன்சிலா் சிவா, வழக்குரைஞா் மகாராஜன், பாலசுப்பிரமணியன், ராகுல் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
பொருளாளா் தங்கராஜு மாதவன் தொகுத்து வழங்கினாா். சங்க மேலாளா் கந்தன் நன்றி கூறினாா்.