ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
கோவில்பட்டியில் புதிய எல்இடி விளக்குகள் இயக்கி வைப்பு
கோவில்பட்டி புது ரோட்டில் ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய எல்இடி விளக்குகளை துரை வைகோ எம்.பி. திங்கள்கிழமை இயக்கி வைத்தாா்.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 11,13 மற்றும் 21ஆவது வாா்டுகளுக்குள்பட்ட புது ரோட்டில் பாராளுமன்ற உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சி திட்டம் 2024-25 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 30 எல் இ டி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டுக்கு விளக்குகளை இயக்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா்.
துணைத் தலைவரும் மதிமுக மாவட்டச் செயலருமான ஆா்.எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தாா். மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. புதிய எல்இடி விளக்குகளை இயக்கி வைத்தாா். தொடா்ந்து கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், மதிமுக துணைப் பொது செயலா் தி.மு. ராசேந்திரன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா், விநாயக ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் சரவணன், ராஜசேகா், ராஜகோபால், குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலெட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலா்கள் பவுன் மாரியப்பன் தெய்வேந்திரன்,
தலைமை செயற்குழு உறுப்பினா்கள் எல்.எஸ். கணேசன், வனராஜ்,
கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலா் கோடையிடி ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.