தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
காரைக்காலில் இன்று மக்கள் குறைகேட்பு முகாம்: டிஐஜி பங்கேற்பு
காரைக்காலில் சனிக்கிழமை (மாா்ச் 22) டிஐஜி பங்கேற்று பொதுமக்கள் குறைகளை கேட்கவுள்ளாா்.
புதுவை டிஜிபி அறிவுறுத்தலின்பேரில் காவல்துறை சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. சனிக்கிழமை திருப்பட்டினம் காவல் நிலையத்தில் புதுவை டிஐஜி சத்தியசுந்தரம் தலைமையில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை குறைகளை கேட்கவுள்ளாா்.
அதுபோல திருநள்ளாறு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்கவுள்ளாா்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.