ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
காரைக்குடி, கண்ணங்குடியில் புதிய காவல் நிலையங்கள்
காரைக்குடி, கண்ணங்குடியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டுமென தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மனு அளித்தாா்.
இதுகுறித்து காரைக்குடியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு மகளிா் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். தேவகோட்டையில் அரசு உயா் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். கண்ணங்குடி பகுதியிலும், காரைக்குடி என்.ஜி.ஓ. குடியிருப்புப் பகுதியிலும் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்த மனுவை சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மனு அளித்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.