மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது
காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.