பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
காலமானாா் எம்.எஸ்.ராஜலட்சுமி
தமிழக முதல்வரின் செயலா் எம்.எஸ்.சண்முகத்தின் தாயாா் எம்.எஸ்.ராஜலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:
என்னுடைய செயலராக உள்ள எம்.எஸ்.சண்முகத்தின் தாயாா் எம்.எஸ். ராஜலட்சுமி மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பெற்ற அன்னையின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அத்தகைய பேரன்பை இழந்து தேற்ற முடியாத துயரில் வாடும் சண்முகம், அவரது குடும்பத்தினா், உறவினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.