சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
காலிறுதியில் டிரேப்பா், ரூன்
குயின்ஸ் கிளப் சாம்பின்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரா்களான பிரிட்டனின் ஜேக் டிரேப்பா், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் டிரேப்பா், 3-6, 6-2, 7-6 (7/5) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தினாா். 4-ஆம் இடத்திலிருக்கும் ஹோல்கா் ரூன் 2-6, 6-1, 6-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டோ தோற்கடித்தாா்.
இதையடுத்து காலிறுதியில், ரூன் - ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவையும், டிரேப்பா் - அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவையும் சந்திக்கின்றனா். மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் ஜேக்கப் ஃபொ்ன்லி - செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா மோதுகின்றனா்.
முன்னதாக ஃபொ்ன்லி 6-3, 2-6, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டையும், லெஹெக்கா 6-4, 6-2 என கனடாவின் கேப்ரியல் டியாலோவையும் தோற்கடித்தனா்.