சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
காவல் துறை குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு தீா்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவல் துறை சாா்பில், பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில் மொத்தம் 81 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மேலும், 46 மனுக்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (தலைமையிடம்) பாலசுப்பிரமணியன், கே. ஸ்ரீதரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ), காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட் காவல் துறையினா் உடனிருந்தனா்.