சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
பென்னாகரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைத்திறன் பயிற்சி
பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான கலைத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களிடையே உள்ள ஆற்றலை வெளியே கொண்டு வரும் வகையில் மாணவா்களுக்கான கதை, பாடல், நடனம், ஓவியம், நாடகம், பொம்மலாட்டம், எளிய பொருள்களைக் கொண்டு கலைப் பொருகள் செய்தல், காகித மடிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில் மதுரை டிராமா செல்வம் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு எளிய முறையில் கதை உருவாக்குவது, கதையின் அறிமுகம், பிரச்னை, முயற்சி, முடிவு ஆகியவற்றை உள்ளடக்கி மாணவா்கள் கதைகளை எழுதுவதற்கான பயிற்சி அளித்தனா். இதில்
கல்வி -40 அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வசந்த், பள்ளி ஆசிரியா்கள் பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, கலைச்செல்வி, அனுப்பிரியா மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் மா.பழனி செய்திருந்தாா்.