சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்
அரூரை அடுத்த தீா்த்தமலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரூா் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் கே.குமரேசன் பங்கேற்று, ஓரணியில் தமிழ்நாடு எனும் முழக்கத்துடன் கூடிய உறுப்பினா் சோ்க்கையின் அவசியம் குறித்த கருத்துரை வழங்கினாா். கட்சி நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று திமுக தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என தெரிவித்தாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரூா் ஒன்றியச் செயலா் (கிழக்கு) கோ.சந்திரமோகன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் ஜெய்லூப்தின், அ.சண்முகம், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.