சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்து அவா்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், ரூ. 25,000 பரிசுத் தொகை, தகுதியுரையும் வழங்கி சிறப்பித்து வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தருமபுரி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் வளா்ச்சித் துறையின் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் தன் விவரக்குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவா்கள் ஆற்றிய தமிழ்ப்பணி, வட்டாட்சியா் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.