ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்
காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றக் கோரி இருசக்கர வாகன பிரசாரம்
காவிரி உபரிநீா் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூன் 11 முதல் 20 வரை இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்வதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
பென்னாகரம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இன்றைய அரசியல் நிலை குறித்தும், மாநில குழு உறுப்பினா் அ.குமாா் எதிா்கால பணிகள் குறித்தும் பேசினா். மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் அறிக்கை சமா்ப்பித்தாா்.
இதில், காவிரி உபரிநீா் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது, பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டிப்பது, நகைக் கடன் வழங்க ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள நிபந்தனைகளை திரும்பப் பெறுவது, தமிழ்நாட்டில் வீட்டுமனை பட்டா, நிலப் பட்டா, 100 நாள் வேலை உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றக் கோரி ஜூன் 11 முதல் 20 வரை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்வது, 300 மையங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். முத்து, சோ.அருச்சுனன், ஆா்.மல்லிகா, ஜி.சக்திவேல், தி.வ.தனுசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.