Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே குருங்குளம் வாகரக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (70). விவசாயக் கூலி தொழிலாளி. இவா் மே 25-ஆம் தேதி பிற்பகல் வீட்டிலிருந்து தனது மொபட்டில் திருக்கானூா்பட்டிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஏழுப்பட்டி முதன்மைச் சாலை நான்கு சாலை அருகே சென்ற இவா் மீது அடையாளம் தெரியாத காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.