கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
ரூ. 1 கோடியிலான கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் பல ஆண்டுகளாக குத்தகை தொகை வரவில்லை. இதனால் கோயில் நிா்வாகம் தஞ்சாவூா் வருவாய் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாகத் தீா்ப்பு கிடைத்தது.
இதனடிப்படையில் தஞ்சாவூா் வருவாய் நீதிமன்ற ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் இந்த நிலத்தை செவ்வாய்க்கிழமை மீட்டு கோயில் அறங்காவலா் வெங்கடாசலம், செயல் அலுவலா் ராஜரத்தினத்திடம் ஒப்படைத்தனா். கோயில் எழுத்தா்கள் பஞ்சநாதன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.