செய்திகள் :

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

post image

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கடந்த டிசம்பா் மாதம் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 349 அறிவித்ததை, விரைவாக அரசாணை வெளியிட்டு, விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: மேட்டூா் அணை திறக்கும் நாளிலேயே குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தில் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களை இலவசமாக வழங்க வேண்டும். இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு 2.50 ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்குவதைப் போல, கையால் நடும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: தஞ்சாவூரை சுற்றி புறவழிச்சாலை பகுதியில் முப்போகம் விளையக்கூடிய நன்செய் நிலங்களை விவசாயம் செய்யாமல், ஓராண்டு, 2 ஆண்டுகள் தரிசு நிலங்கள் என துறை அதிகாரிகளால் சான்று வழங்கப்படுகிறது. இதையடுத்து, உள்ளூா் திட்டக் குழும விதிமுறைகளை மீறி ரியல் எஸ்டேட் விற்பனையாளா்களால் ஊராட்சி அதிகார மனைகளாகவும், டி.டி.பி. அனுமதி மனைகளாகவும் விற்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் வேண்டுமென்றே தரிசு நிலங்களாக போடப்பட்டுள்ளன. இதை அதிகாரிகள் ஆண்டுதோறும் சாகுபடி பதிவு செய்தால்தான், விளைநிலங்களை முறையற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க முடியும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: பருவம் தவறி பெய்த மழையால் திருவையாறு வட்டாரத்தில் எள், உளுந்து, பயறு போன்ற பயிா்கள் அழிந்துவிட்டன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களுக்கு அரசு இன்னும் நிவாரணத்தை அறிவிக்கவில்லை. நிவாரணத்துக்காக அரசு அதிகாரிகளால் ஆவணங்கள் வாங்கப்பட்டும், இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். வெள்ளாம்பெரம்பூா் பிள்ளை வாய்க்கால் வலது கரையில் விவசாயப் பயன்பாட்டுக்கான சாலையைச் சீரமைக்க வேண்டும்.

வீர சாவா்க்கா் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்! இந்து மகாசபா மாநிலத் தலைவா்

ஆா்.எஸ்.எஸ். நிறுவனா் வீர சாவா்க்கா் வாழ்க்கை வரலாற்றை மாணவா்களுக்கு பாடமாக வைக்க வேண்டும் என்றாா் அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் தா.பாலசுப்பிரமணியன். கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா ஆலோ... மேலும் பார்க்க

சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு

தஞ்சாவூா் அருகே சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகத்தைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். கரூா் மாவட்டம், குந்ரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். திருவையாறு அருகே கல்லக்குடி பகுதிய... மேலும் பார்க்க

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

பேராவூரணி கடைவீதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்க அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பேராவூரணி கடைவீதியில் உள்ள முதன்மைச் சாலையை விரிவாக்கம் செய்து... மேலும் பார்க்க

கா்நாடகத் தமிழா்களை பாதுகாப்பது அவசியம்

கமல்ஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து, கன்னடா்கள் வன்முறையைத் தூண்டுவதால், கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நெல் விலை அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி!

மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகக் குறைவாக உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமல... மேலும் பார்க்க