குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி குடிநீா் பிரிவு அதிகாரிகளிடம் புகாா் செய்தும் பயனில்லை. இதைக் கண்டித்து கும்பகோணம் -சுவாமிமலை சாலையில் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.