காா்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே 2 காா்கள் மோதிக் கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முகமது நவ்பால் (30). இவா் காரில் சனிக்கிழமை மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி-ராஜபாளையம் சாலையில் அருவாள் கோயில் அருகே சென்றபோது, இந்தக் காரும் எதிரே வந்த காரும் மோதிக்கொண்டன.
இதில் எதிரே வந்த காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த சேகுதுமான் (71) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி மனைவி பைரோஜா (57), காா் ஓட்டுநா் முகமது காசிம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.