Tsunami 20 : 'எங்கும் பிணக் குவியல்; மனதை மரத்துப்போக வைத்துத்தான்...' - ராதாகி...
காா்த்திகை தீபம் : அகல் விளக்கு விற்பனை தீவிரம்
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, காரைக்காலில் பல்வேறு இடங்களில் அகல் விளக்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில், கோட்டுச்சேரி மற்றும் மேலஓடுதுறை பகுதியில் அகல் விளக்கு தயாரிப்போா் உள்ளனா். இவா்கள் பருவமழைக்கு முன்பு உற்பத்தியை செய்து முடித்தனா். கடந்த சில நாள்களாக அகல் விளக்குகள் சந்தைக்கு வரத் தொடங்கின. மேலும் விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு வடிவங்களில் தயாரித்து, வண்ணம் பூசி அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை வியாபாரிகள் வாங்கி வந்து காரைக்கால் நகரம் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விற்பனை செய்து வருகின்றனா்.
மண் விளக்கு சிறியது ரூ.5, பெரியது ரூ. 20, ஐந்து முக விளக்கு ரூ. 50, தேங்காய் விளக்கு ரூ. 50, துளசிமாட விளக்கு ரூ. 30, மண் குத்து விளக்கு ரூ. 30 என விற்பனை செய்யப்படுகிறது.