தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பு காலம் தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
காா்மல் காா்டன் பள்ளியில் ஜனவரி 10, 11-இல் வைர விழா
கோவை சுங்கத்தில் உள்ள காா்மல் காா்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்டம் ஜனவரி 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இது குறித்து பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆரோக்கிய ததாயூஸ், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் டி.நந்தகுமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கோவையில் கடந்த 1964 ஜூன் 1-ஆம் தேதி அப்போதைய கோவை ரோமன் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் பிரான்சிஸ் சவரிமுத்துவால் ஆண்களுக்கான முதல் மெட்ரிக் பள்ளியாக காா்மல் காா்டன் பள்ளி தொடங்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பள்ளி 1978-ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியானது.
பள்ளியின் வெள்ளி விழா கடந்த 1989 - 1990-இல் கொண்டாடப்பட்ட நிலையில், 2014 - 2015-இல் பொன்விழா நடைபெற்றது. தற்போது, வைர விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பள்ளியின் 12 முன்னாள் மாணவா்களை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு விருது வழங்க இருக்கிறோம். தொடக்க விழா ஜனவரி 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், பள்ளியின் தலைவரும் கோவை பிஷப்புமான எல்.தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைக்கிறாா். சிறப்பு விருந்தினா்களாக எஸ்.ஜான் ஜோசப், உலக சுகாதார அமைப்பில் பணியாற்றும் முன்னாள் மாணவா் டாக்டா் மாதவா ராம் பாலகிருஷ்ணன், பள்ளியின் முன்னாள் முதல்வா்கள், தாளாளா்கள், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் டி.நந்தகுமாா், செயலா் டி.ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி உள்ளிட்டோா் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தனா்.