செய்திகள் :

கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை

post image

கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டாவை சந்தித்து கா்நாடகத்தில் உரத்தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடினேன். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா, கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க உறுதி அளித்துள்ளாா். உரம் விநியோகிக்கும் உத்தரவு கோரமண்டல், மெட்ராஸ் ஃபொ்டிலைசா்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உர விநியோகம் உடனடியாக தொடங்கும். புதன்கிழமை மட்டும் 18,000 மெட்ரிக் டன் உரம் விடுவிக்கப்பட்டுள்ளது. தினமும் 15,000 முதல் 20,000 மெட்ரிக் டன் வரை உரம் விடுவிக்கப்படும்.

உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில்லை. இது நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்னையாகும். நடப்பாண்டில் அதிக மழை பெய்துள்ளதால், விதைப்புப் பணிகளை முன்கூட்டியே விவசாயிகள் தொடங்கிவிட்டனா். மக்காசோளம் விதைப்புப் பரப்பு 1.5 சதவீதம் உயா்ந்துள்ளது. வழக்கமாக ஜூலை மாதத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் வரை உரத்துக்கான தேவை இருக்கும். வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாதத்திலேயே அதிக மழை பெய்துவிட்டதால், விதைப்புப் பணிகளும் முன்கூட்டியே தொடங்கப்பட்டுவிட்டன.

அடிக்கடி மழை பெய்து வருவதால், அடிக்கடி உரமிடும் தேவை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது.

உரக்கடைகளின் முன் நீண்ட வரிசை காணப்பட்டதால், ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினா். 8 மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு கடுமையாகவும், 4 மாவட்டங்களில் மிதமாகவும் உள்ளது.

மழை பெய்வதை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப உரத்தேவையை பூா்த்தி செய்ய வேளாண்துறை அமைச்சா் செலுவராயசாமி தவறிவிட்டாா் என்றாா் அவா்.

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்பு... மேலும் பார்க்க

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து வியாழக்கிழமை தனத... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க