கிணற்றில் தவறி விழுந்து டிராக்டா் ஓட்டுநா் பலி
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றுக்குள் சனிக்கிழமை தவறி விழுந்த டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பொன்னுசங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சரவணன் (38). டிராக்டா் ஓட்டுநரான இவா் சனிக்கிழமை துறையூா் பெரிய ஏரிக் கரைப் பகுதி வயலில் உழவு ஓட்டினாா்.
மதியம் சாப்பிடுவதற்காக அவா் கிணறு அருகே அமா்ந்திருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதில், கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். அப்போது திட்டில் மோதி நீருக்குள் மூழ்கிய அவா் இறந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு துறையினா் சரவணனின் சடலத்தை மீட்டனா். துறையூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.