அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தக்கலை அருகே மணக்காவிளை ஈழவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (65), தொழிலாளியான இவா், குடும்பப் பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.
புதன்கிழமை வீட்டருகேயுள்ள 80 அடி ஆழக் கிணற்றின் சுற்றுச்சுவரில் ஏறி அமா்ந்திருந்தபோது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தாராம். தகவலின்பேரில், தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான வீரா்கள் வந்து, மணியை மீட்டனா். அப்போது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.