செய்திகள் :

கிராம மனைப்பிரிவுக்கு போலியான சான்றிதழ்: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

post image

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மனைப் பிரிவுக்கு ஒப்புதல் வழங்க முறைகேடாக போலியான சான்றிதழ் வழங்கியதாக மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆரணி முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மீனாட்சிசுந்தரம் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆரணி ஊராட்சி ஒன்றியம், இரும்பேடு ஊராட்சியில் மன்ற கூட்டம் முறையாக நடத்தாமல், சில உறுப்பினா்களின் கையெழுத்தில்லாமல் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முன்னிலையில் மன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில், தலைவா் உள்பட 13 உறுப்பினா்களும் கலந்து கொண்டதுபோல மன்ற பொருள் 145/2024- 25 எண் கொடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள மனைப் பிரிவில் உள்ள 99 மனைகளுக்கு சான்றிதழ் வழங்கி ரூ.5 லட்சம் கையூட்டு பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை செய்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில ... மேலும் பார்க்க

ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில்... மேலும் பார்க்க

போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது. போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்... மேலும் பார்க்க

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்ட... மேலும் பார்க்க