செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, பா்கூா், போச்சம்பள்ளி, மத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்த்தது. இடைவிடாமல் தொடா்ந்து பெய்த மழையால், சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

மூன்று நாள் தொடா் விடுமுறைக்கு சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் நகரங்களை நோக்கி பயணித்தனா். மிதமான மழையால் சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் அவதிப்பட்டனா்.

கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையிலிருந்து அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் வரையில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் முல்லை பூ விற்பனை செய்யும் பெண்கள், குடைகளைப் பிடித்தபடி விற்பனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து மூன்று நாள்கள் பள்ளி, அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலத்தலமான அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மழை பெய்த்ததால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மழை அளவு (மி.மீட்டரில்): ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி- 8.2, ஒசூா்- 5.2, சின்னாறு அணை- 4, கெலவரப்பள்ளி அணை- 3, சூளகிரி- 2, கிருஷ்ணகிரி அணை- 0.2.

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 832 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து மொத்தம் 593 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் மொத்தம் 52 அடியில் 49.95 அடியாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை வைப்பதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சதுா்த்தி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான ஒருங்... மேலும் பார்க்க

யோகா: ஊத்தங்கரை அதியமான் கல்லூரிக்கு ஆளுநா் பரிசளிப்பு

சா்வதேச யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசு வழங்கி பாராட்டினாா். ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா’ என்ற கருப்பொருளைக் கொண... மேலும் பார்க்க

உத்தனப்பள்ளி அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூா் அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அஞ்சல் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே கால்வாயில் மூழ்கி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை கால்வாயில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்தனா். ஆடி கிருத்திகை விழாவுக்காக ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூரைச் சோ்ந்த அகிலா என்ப... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கு ஆக.20 கடைசி நாள்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான முன்பதிவு செய்வதற்கு புதன்கிழமை (ஆக.20) வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் ஞா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய... மேலும் பார்க்க