முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கு ஆக.20 கடைசி நாள்
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான முன்பதிவு செய்வதற்கு புதன்கிழமை (ஆக.20) வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய்/ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுவரை 10 லட்சம் போட்டியாளா்கள் முன்பதிவு செய்துள்ளனா். முன்பதிவிற்கான இறுதி நாள் ஆக.16 ஆம் தேதி (சனிக்கிழமை) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஆக.20 இரவு 8 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை 95140 00777 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.