இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
யோகா: ஊத்தங்கரை அதியமான் கல்லூரிக்கு ஆளுநா் பரிசளிப்பு
சா்வதேச யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசு வழங்கி பாராட்டினாா்.
‘ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா’ என்ற கருப்பொருளைக் கொண்டு ஜூன் 21-ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான யோகா போட்டி நடைபெற்றது. 875 கல்வி நிறுவனங்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் போட்டியில் கலந்துகொண்டனா்.
இதில் ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மூன்றாம் இடம் பெற்றது. ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலாளா் ஷோபா திருமால்முருகனிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி கேடயம், பரிசுகளை வழங்கி பாராட்டினா்.