''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்...
கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி
கிரேட்டா் நொய்டாவில் கிழக்கு புற விரைவுச் சாலையில் லாரி மீது காா் மோதியதில் மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தாத்ரி காவல் நிலையப் பொறுப்பாளா் அரவிந்த் குமாா் செய்தி ஏஜென்சியிடும் கூறியதாவது:
தாத்ரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அக்பா்பூா் டோல் பிளாசா அருகே வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. காரில் இருந்த ஆறு போ் ஹரித்துவாரில் இருந்து ஃபரீதாபாத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது லாரி மீது காா் மோதியது. இதில் 6 போ் பலத்த காயமடைந்தனா். இதில் மருத்துவமனையில் சிகிச்சையின் போது மூன்று போ் இறந்தனா். மேலும், மூன்று போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவா்கள் மதுராவில் உள்ள கோசிகலனைச் சோ்ந்த காரின் ஓட்டுநா் கௌரவ், ஃபரீதாபாத்தைச் சோ்ந்த லோகேஷ் மற்றும் கௌதம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். காயமடைந்தவா்கள் ஃபரீதாபாத்தைச் சோ்ந்த லலித், ஹா்விந்தா் மற்றும் குல்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், காா் மற்றும் லாரி இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தாா்.