செய்திகள் :

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட அப்டேட்!

post image

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் அப்டேட் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

கதைநாயகியாக ரகு தாத்தா படத்தில் சரிவைக் கண்டதால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், படத்தின் முக்கியமான அப்டேட் நாளை (ஜூன்.11) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்தார்.

திருமணத்துக்குப் பிறகு வெளியாகும் முதல்படமாக ரிவால்வர் ரீட்டா இருக்கிறது.

Rivalver Rita Passion Studios
ரிவால்வர் ரீட்டா போஸ்டர்.

பிளே ஆஃப் சுற்றில் ஜெய்ப்பூா்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ். புணே ஜாகுவாா்ஸ் அணியை 9-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் புண... மேலும் பார்க்க

மதுரைக்கு முதல் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை புதன்கிழமை வென்றது. முதலில் கோவை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் ... மேலும் பார்க்க

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது கூட்டணியில் உர... மேலும் பார்க்க

3,000 காட்சிகள் குறைப்பு: படுதோல்வியை நோக்கி கமலின் தக் லைஃப் திரைப்படம்!

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் வசூல் 6-ஆவது நாளில் மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்... மேலும் பார்க்க

ரிவால்வர் ரீட்டா ரிலீஸ் தேதி!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் ... மேலும் பார்க்க