கீழக்கரையில் கல்லூரிப் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி
கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக 12 உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மூன்று நாள்களாக சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதல் இடத்தை அழகப்பா பல்கலைக்கழக அணியும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரி தேவகோட்டை அணியும், மூன்றாம் இடத்தை முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரி அணியும் வென்றன.
இதற்கான பரிசளிப்பு விழாவில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். இதில், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் ஜெயகாந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் வரவேற்றாா்.