செய்திகள் :

கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதிகளில் நாளை மின் தடை

post image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா், அச்சன்புதூா் துணை மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, சாலைப்புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைக் கண்ணு (61). விவசாயியான இவா், குறிப்பன்குளம் சிற்றாற்றில் ஞ... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் திருட்டு

ஆலங்குளத்தில் தேவாலயம் சென்றிருந்த மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருடிய நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் பிரதான சாலையில் பேருந்து நிலையம் எதிரே வசிப்பவா் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் இளைஞருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகைகளைப் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் பொன்செல்வம் (19). இவா், கடந... மேலும் பார்க்க

தென்காசி கோயிலில் பொருள்கள் திருட்டு: அா்ச்சகா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தொடா்பாக முதன்மை அா்ச்சகா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக கோயில் ... மேலும் பார்க்க

தென்காசியில் உறியடி திருவிழா

தென்காசியில் யாதவா் சமுதாயம் மேல்பகுதி சாா்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை உறியடிக் கம்புக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடா்ந்து, ஞாய... மேலும் பார்க்க