செய்திகள் :

குடிநீா் திட்டத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு: சமரசக் கூட்டத்தில் முடிவு

post image

ஆரணி அருகே குண்ணத்தூா் கிராம கமண்டல நாக நதிக் கரையோரம் கிணறு அமைத்து, களம்பூருக்கு கூடுதலாக குடிநீா் எடுத்துச் செல்லும் திட்டத்துக்கு அக்கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், வியாழக்கிழமை ஆரணி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் தீா்வு காணப்பட்டது.

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் கமண்டல நாக நதிக் கரையிலிருந்து களம்பூா் பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டாா் மூலம் நீா் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது, குண்ணத்தூா் கமண்டல நாக நதிக் கரையோரம் நிலத்தடிநீா் மிகவும் குறைவாக உள்ளது.

இந்த நிலையில், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.17 கோடியில் குடிநீா் நீரேற்றும் கிணறு அமைத்து கூடுதலாக குடிநீா் எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனா். இதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பணி நடைபெறும் இடத்தில் குண்ணத்தூா் மக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். அப்போது, 300 அடி தொலைவு தள்ளி இத்திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கூறினா்.

இதற்கு களம்பூா் பொறியாளா் அருண் ஒப்புக்கொள்ளாததால், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பணியை பிறகு மேற்கொள்ளலாம் என முடிவு செய்து, பணியை தற்காலிகமாக நிறுத்தினா்.

இதன் காரணமாக, இத்திட்டம் செல்படுத்துவது குறித்து குண்ணத்தூா், களம்பூா் முக்கிய பிரமுகா்களை அழைத்து ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது.

இதில், குண்ணத்தூா் சாா்பில் திமுக ஒன்றியச் செயலா் துரைமாமது, அதிமுக பேரவை ஒன்றியச் செயலா் செந்தில், ஏரிப்பாசன சங்கத் தலைவா் முருகன், மதிவாணன், வாசுதேவன் ஆகியோரும், களம்பூா் சாா்பில் திமுக நகரச் செயலா் வெங்கடேசன், துணைச் செயலா் ஞானமணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சிவலிங்கம், ஏழுமலை ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் இரு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, முடிவாக தற்போது செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை 300 அடி தொலைவு தள்ளிச் சென்று நீரோட்டம் பாா்த்து செயல்படுத்துவது என முடிவு செய்தனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க