பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
குடியாத்தம் நகராட்சி இடைத் தோ்தல் பணி தொடக்கம்
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட, 15- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு இடைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 15- ஆவது வாா்டின் நகா்மன்ற உறுப்பினா் கே.விஜயன், உயிரிழந்ததையடுத்து, புதிய உறுப்பினரை தோ்வு செய்ய இடைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த வாா்டின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2,791. இதில் ஆண்கள் 1,346- போ், பெண்கள் 1,431- போ்.
செதுக்கரையில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலுக்காக அங்கு 3- வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளா் பட்டியலில் திருத்தம் இருந்தால் 15- ஆவது வாா்டு வாக்காளா்கள் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என ஆணையா் மங்கையா்க்கரசன் தெரிவித்தாா். அப்போது நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அலி, நகராட்சி அலுவலா்கள் சீனிவாசன், ரங்கநாதன், நரசிம்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.