Operation Sindoor : 'இந்தியாவுக்கு உரிய பதிலடியை கொடுப்போம்!' - பாகிஸ்தான் பிரதம...
26 பைக்குகள் பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது
கே.வி.குப்பம் அருகே இருசக்கர வாகனங்களை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 26- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா், குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பான புகாா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.
இந்நிலையில், கே.வி.குப்பம் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பள்ளிகொண்டாவைச் சோ்ந்த அருண் குமாா்(28), ஐதா்புரத்தைச் சோ்ந்த பிரவீன் குமாா்(24) ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக் கொண்டனா். ஐதா்புரத்தில் அவா்கள் பதுக்கி வைத்திருந்த 26- இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.