குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சனிக்கிழமை சென்றார்.
தொடர்ந்து தாஜ்மஹாலை பார்வையிட்ட அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் தனிப்பட்ட பாராட்டுக் குறிப்புகளை பதிவு செய்தார்.
போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
இதுகுறித்து தாஜ்மஹால் பாதுகாப்பாளர் அரீப் அகமது கூறுகையில், ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையொட்டி உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சிஐஎஸ்எஃப் உடன் இணைந்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தாஜ்மஹால் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது என்றார்.
ரிஷி சுனக்குடன் அவரது மகள்கள், மனைவி மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர்.