திருப்பூரில் வடமாநில பெண் கூட்டு பாலியல்: பிகாரை சேர்ந்த 3 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் கத்தி முனையில் வடமாநில பெண்ணை கூட்டு பாலியல் வன்கொன்டுமை செய்த பிகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி வந்தபோது இந்த கொடுமை நேர்ந்துள்ளது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த தம்பதியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்கள் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று கணவனை கட்டிப்போட்டு விட்டு குழந்தை கண் எதிரில் கத்தியைக் காட்டி மிரட்டி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து திருப்பூரில் பணியாற்றும் பிகாரை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளரின் மனைவியை புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.