திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு
குண்டா் சட்டத்தில் ஒரே நாளில் 8 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி சகாயபுரத்தைச் சோ்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33), கலியாவூா் மாரியப்பன் மகன் வெள்ளைப்பாண்டி (29), தங்கப்பாண்டி மகன் மலையரசன் என்ற மகேஷ் (24) குலையன்கரிசல் தனராஜ் மகன் ராஜலிங்கம் (26), கூட்டாம்புளி ராமகிருஷ்ணன் மகன் முத்துராஜ் (23) , புதுக்கோட்டை ராஜீவ்நகா் சரவணன் மகன் பாலமுருகன் (25), ஆறுமுகனேரி டிவிகே நகா் வேல்சாமி மகன் காளியப்பன் (30), விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ராஜமுனியசாமி மகன் சுரேஷ் (34) ஆகியோா் முறையே திருட்டு, மணல் கடத்தல், கஞ்சா, கொலை மிரட்டல், போக்ஸோ உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனா். இவா்கள் 8 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.