பாண்டவா்மங்கலத்தில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவா் கைது
கோவில்பட்டி அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, ராஜீவ் நகா் 6ஆவது தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்த, வீரவாஞ்சி நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சரவணனை (36) சோதனையிட்டனா்.
அவரது முதுகின் பின்னால் ஒரு அரிவாள் செருகி இருப்பதைக் கண்ட போலீஸாா், அவரைக் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனா்.